TNPSC Thervupettagam

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் வைரஸைக் கண்டறியும் முறை

February 21 , 2022 1273 days 637 0
  • ஹைதராபாத்தில் உள்ள தேசிய விலங்கு உயிரித் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், ஜப்பானிய மூளையழற்சி வைரஸைக் கண்டறிய "அளவு குறைக்கப்பட்ட கிராபீன் ஆக்சைடால் ஆன புளோரின் ஏற்றம் செய்யப்பட்ட ஒரு டின் ஆக்சைடு மின்முனை" (Fluorine Doped Tin Oxide (FTO) electrode fabricated with reduced Graphene Oxide) என்பதினை உருவாக்கியுள்ளது.
  • ஜப்பானிய மூளைக் காய்ச்சல் வைரஸ் ஆனது மேற்கு பசிபிக் மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் கொசுக்களால் பரவும் மூளைக் காய்ச்சலுக்கு ஒரு முக்கிய காரணியாகும்.
  • இது பெரும்பாலும் டெங்குக் காய்ச்சல் என்று தவறாகக் கண்டறியப்படுகிறது.
  • ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கு எந்தச் சிகிச்சையும் இல்லை.
  • எனவே, இந்த நோயின் தொற்றினைத் தணிக்க, அதை முன்கூட்டியே கண்டறிவது மிக அவசியமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்