TNPSC Thervupettagam

ஜப்பானில் யென் ஸ்டேபிள்காயின்

November 1 , 2025 15 hrs 0 min 4 0
  • ஜப்பானின் புத்தொழில் நிறுவனமான JPYC, யென் உடன் முழுமையாக இணைக்கப் பட்ட உலகின் முதல் ஸ்டேபிள்காயினை வெளியிட உள்ளது.
  • இந்த ஸ்டேபிள்காயின் உள்நாட்டு சேமிப்பு மற்றும் ஜப்பானிய அரசாங்கப் பத்திரங்களால் (JGB) ஆதரிக்கப்படுகிறது.
  • JPYC என்று பெயரிடப்பட்டுள்ள இதற்கு ஆரம்பத்தில் எந்தப் பரிவர்த்தனை கட்டணமும் இருக்காது.
  • வருவாய் ஆனது JGB வருவாய் இருப்பின் மீதான வட்டியிலிருந்து வரும்.
  • ஃபியட் நாணயங்களுடன் இணைக்கப்பட்ட ஸ்டேபிள்காயின்கள் வழக்கமான வங்கி முறைகளுடன் ஒப்பிடும் போது வேகமான மற்றும் மலிவான பரிவர்த்தனைகளை வழங்குகின்றன.
  • ஜப்பானில் 2010 ஆம் ஆண்டில் 13.2% ஆக இருந்த பணமில்லா கொடுப்பனவுகள் 2024 ஆம் ஆண்டில் 42.8% ஆக உயர்ந்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்