சமீபத்தில் ஏவுதல்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜிசாட்-1A (புவிசார் படமெடுக்கும் செயற்கைக்கோள்-1A) செயற்கைக் கோளை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட GSLV-F10 (புவி-ஒத்திசைவு செயற்கைக் கோள் ஏவு வாகனம்-F10) திட்டத்தின் போது இழக்கப்பட்ட EOS-03 (புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்-03) எனப்படும் ஜிசாட்-1 செயற்கைக்கோளுக்கு மாற்றாக ஜிசாட்-1A செயல்படும்.
வால்வு கசிவு காரணமாக திரவ-ஹைட்ரஜனின் அழுத்தம் குறைந்ததால், கிரையோ ஜெனிக் மேல் நிலை இயங்காமல் போனதன் காரணமாக 2021 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட அத்திட்டம் தோல்வியடைந்தது.
ஜிசாட்-1A செயற்கைக்கோள் GSLV Mk-II (புவி-ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவு வாகனம் மார்க்-II) மூலம் ஏவப்பட உள்ளது. மேலும் இது வெள்ளம், புயல், விவசாயம் மற்றும் காடுகளைக் கண்காணிப்பதற்காக இந்தியாவின் பரந்த அளவிலான பகுதிகளைக் கண்காணித்து தகவல்களை வழங்கும்.
ஏவுகலக் கருவியின் நம்பகத்தன்மை, சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துதல் மற்றும் புகைப்படம் எடுக்கும் செயல்திறன் ஆகியவற்றை இத்திட்டம் சோதிப்பதுடன் NavIC (இந்திய விண்மீன் தொகுதியைக் கொண்டு வழிச்செலுத்துதல்) அமைப்புக்காக திட்டமிடப்பட்டுள்ள NVS-03 (வழிச்செலுத்தல் செயற்கைக்கோள்-03) திட்டத்திற்கு முன்னதாக இது ஒரு முக்கியமான திட்டமாகப் பார்க்கப்படுகிறது.