TNPSC Thervupettagam

ஆப்பிரிக்காவின் அதீத வெப்ப நெருக்கடி

August 26 , 2026 10 hrs 0 min 32 0
  • ஓர் ஆய்வில், ஆப்பிரிக்காவின் முறைசாரா குடியிருப்புகளில் நிலவும் அதீத வெப்பம் சுகாதார ஏற்றத்தாழ்வுகளை மோசமாக்குகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த முறையான மதிப்பாய்வானது 11 கல்வி தரவுத்தளங்களில் உள்ள 96,608 பதிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 2010 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கு இடையில் வெளியிடப்பட்ட 21 ஆய்வுகளை ஆய்வு செய்தது.
  • தென்னாப்பிரிக்கா, கென்யா, தான்சானியா, கேமரூன், எகிப்து, நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளை இந்த ஆய்வுகள் உள்ளடக்கியிருந்ததுடன் மோசமான வீடுகள், அதிக மக்கள் நெரிசல், வரையறுக்கப்பட்ட தண்ணீர் மற்றும் பலவீனமான உள்கட்டமைப்பு ஆகியவை வெப்ப பாதிப்பை அதிகரித்துள்ளன.
  • நீரிழப்பு, வெப்பச் சோர்வு, வெப்பத் தாக்கம் (heatstroke), தலைவலி, தூக்கப் பிரச்சனைகள், சுவாச நோய்கள், மனநலப் பிரச்சனைகள் மற்றும் பிற நோய்கள் ஆகியவை வெப்பம் தொடர்பான விளைவுகளில் அடங்கும்.
  • பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் அதீத வெப்பத்தின் தாக்கம் மற்றும் அடிப்படையான சமூக-பொருளாதார நிலைமைகள் ஆகிய இரண்டிற்கும் தீர்வு காணும் வகையிலான தழுவல் நடவடிக்கைகளின் தேவையை இந்த ஆய்வு எடுத்துக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்