TNPSC Thervupettagam

கிளைபோசேட் தடை - இமாச்சலப் பிரதேசம்

August 26 , 2026 10 hrs 0 min 32 0
  • வனப் பகுதிகளில் கிளைபோசேட் (Glyphosate) கலந்த களைக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என 44 சமூக மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள், ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் அறிவியலாளர்கள் இமாச்சலப் பிரதேச அரசை வலியுறுத்தியுள்ளனர்.
  • சட்டவிரோதமான பட்டாணி மற்றும் சணல் சாகுபடிக்காக தாவரங்களை அழிப்பதற்கு கிளைபோசேட் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது; அதிக உயரமுள்ள வனப் பகுதிகளில் இத்தகைய நடைமுறை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இத்தகைய சாகுபடியானது 1980 ஆம் ஆண்டின் வனச் (பாதுகாப்பு) சட்டம், 1927 ஆம் ஆண்டின் இந்திய வனச்சட்டம் மற்றும் 2002 ஆம் ஆண்டின் பல்லுயிர் பரவல் சட்டம் ஆகியவற்றை மீறுவதாக அக்குழுக்கள் தெரிவித்துள்ளன.
  • களைக்கொல்லிப் பயன்பாடு பதிவாகியுள்ள பகுதிகளில் இரசாயன எச்சங்கள் உள்ளதா என்பதை அறிய மண், நீர், தாவரங்கள் மற்றும் பல்லுயிர் ஆகியவற்றின் அறிவியல் பூர்வமான பரிசோதனையை அவர்கள் கோரியுள்ளனர்.
  • வனத்துறையானது இதுதொடர்பாக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையைக் கையாண்டு வருவதுடன், இது வரை ஐந்து சிறிய வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பட்டாணி சாகுபடியை அழித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்