நாசா அறிவியலாளர்கள் செயற்கைக்கோள் படம்பிடிப்பு மற்றும் புவி இயற்பியல் வரைபடத்தைப் பயன்படுத்தி, ஜிம்பாப்வேயின் கிரேட் டைக் பகுதிக்குள் 2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு மறைந்திருக்கும் உள் கட்டமைப்பைக் கண்டறிந்து உள்ளனர்.
கிரேட் டைக் என்பது மத்திய ஜிம்பாப்வேயில் அமைந்துள்ள 550 கிலோமீட்டர் நீளமான தீப்பாறை அமைப்பாகும்.
இது ஒரு லோபோலித் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளதுடன், இது குளிர்ந்த மாக்மாவிலிருந்து உருவான தட்டு போன்ற வடிவிலான தீப்பாறை ஊடுருவலாகும்.
இந்த அமைப்பு ஆர்க்கியன் ஈயான் காலத்தைச் சேர்ந்த ஒரு பண்டைய மாக்மா சேமிப்பு மண்டலத்துடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது.
கிரேட் டைக் பகுதியில் பிளாட்டினம், குரோமியம், நிக்கல், தாமிரம், இரும்பு, டைட்டானியம், வெனடியம் மற்றும் தகரம் போன்ற முக்கியமான தாதுக்கள் உள்ளன.