இது ஒரு இருப்பிடம் சார்ந்த சேவையாகும். இதில் ஒரு செயலி அல்லது பிற சில மென்பொருள்களானது புவியிடங்காட்டி, வானலை அடையாளம், கம்பியில்லாத் தகவல் பரிமாற்ற நுட்பம் அல்லது செல்லிடப் பேசி மூலம் இணைய சேவையைப் பயன்படுத்துகிறது.
ஒரு மொபைல் சாதனம் அல்லது வானலை அடையாளக் குறியானது புவியியல் இருப்பிடத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட மெய்நிகர் எல்லைக்குள் நுழையும் போது அல்லது வெளியேறும் போது, இது முன் வடிவமைக்கப் பட்ட ஒரு செயலைச் செயலாற்றும்படி தூண்டுகிறது. இது ஜியோ - பென்சிங் என அழைக்கப் படுகிறது.
"ஜியோ - பென்சிங்" ஆனது 300 மீட்டர் வரை துல்லியமாக வேலை புரிகிறது.
இந்தியத் தந்திச் சட்டம், 1885 என்ற சட்டத்தின் விதிகளின் கீழ் மாநிலங்கள் தங்கள் உள்துறை செயலாளர்களின் ஒப்புதலைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளன.
"ஜியோ - பென்சிங்" வரம்பு மீறப்பட்டால் மின்னஞ்சல் அல்லது குறுந் தகவல் மூலம் சில குறிப்பிட்ட தொலைபேசி எண்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு தொலைத் தொடர்புத் துறையைக் கோருவதற்கு இந்த ஒப்புதல் உதவி புரிகின்றது.