ஜூலை மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி
August 29 , 2025 65 days 97 0
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது ஜூலை மாதத்தில் 8.7 சதவீதம் குறைந்து 18.56 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது, இது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பதிவானதை விட மிகக் குறைவு ஆகும்.
நாட்டின் எரிபொருள் நுகர்வு மாதந்திர அளவில் 4.3 சதவீதம் குறைந்து 19.43 மில்லியன் டன்னாக இருந்தது.
வருடாந்திர அளவில், 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 19.40 மில்லியன் டன்னாக இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி 4.3 சதவீதம் குறைந்துள்ளது.
சுத்திகரிக்கப்பட்டப் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி 12.8 சதவீதம் குறைந்து 4.31 மில்லியன் டன்களாகவும், அது சார்ந்த விளை பொருட்களின் ஏற்றுமதி 2.1 சதவீதம் குறைந்து 5.02 மில்லியன் டன்களாகவும் உள்ளது.
ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள இந்தியப் பொருட்கள் மீதான 50 சதவீதம் வரையான வரி ஆனது அமெரிக்க இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இலக்காகக் கொண்டு விதிக்கப்பட்டுள்ளன.
வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வரவிருக்கும் விநியோகங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயைத் தொடர்ந்து வாங்க திட்டமிட்டுள்ளன.