TNPSC Thervupettagam

2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள்

August 28 , 2025 9 days 47 0
  • இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள் 2024–25 ஆம் நிதியாண்டில் 67.74 சதவீதம் அதிகரித்து 41.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதோடு, இது முந்தைய ஆண்டு 24.8 பில்லியன் டாலராக இருந்தது.
  • ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதோடு இது இந்திய வணிகங்களில் அதிகரித்து வரும் உலகளாவிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
  • ESG (சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை) முன்னுரிமைகள், உலகளாவிய வரிச் சீர்திருத்தங்கள் மற்றும் GIFT (குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரம்) ஆகியவற்றால் இந்த உயர்வு பதிவானது.
  • வளர்விகித வரி மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்புகள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், லக்சம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற புதிய இடங்கள் முதலீட்டு ஆதரவைப் பெற்றன.
  • குஜராத்தின் GIFT நகரம் ஆனது கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளி நாட்டு முதலீடுகளில் 100 சதவீதம் உயர்வைக் கண்டது என்பதோடு வரி சார்ந்த மேலாண்மை மற்றும் செயல்பாட்டுத் திறனை இது வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்