TNPSC Thervupettagam

ஜூலை மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி

August 29 , 2025 8 days 48 0
  • இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது ஜூலை மாதத்தில் 8.7 சதவீதம் குறைந்து 18.56 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது, இது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பதிவானதை விட மிகக் குறைவு ஆகும்.
  • நாட்டின் எரிபொருள் நுகர்வு மாதந்திர அளவில் 4.3 சதவீதம் குறைந்து 19.43 மில்லியன் டன்னாக இருந்தது.
  • வருடாந்திர அளவில், 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 19.40 மில்லியன் டன்னாக இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி 4.3 சதவீதம் குறைந்துள்ளது.
  • சுத்திகரிக்கப்பட்டப் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி 12.8 சதவீதம் குறைந்து 4.31 மில்லியன் டன்களாகவும், அது சார்ந்த விளை பொருட்களின் ஏற்றுமதி 2.1 சதவீதம் குறைந்து 5.02 மில்லியன் டன்களாகவும் உள்ளது.
  • ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள இந்தியப் பொருட்கள் மீதான 50 சதவீதம் வரையான வரி ஆனது அமெரிக்க இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இலக்காகக் கொண்டு விதிக்கப்பட்டுள்ளன.
  • வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வரவிருக்கும் விநியோகங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயைத் தொடர்ந்து வாங்க திட்டமிட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்