ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC COP31) துருக்கியின் தலைமை மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து 'டர்க்கைஸ் இணைப்பு முன்னெடுப்பைத்' (TNI) தொடங்கி உள்ளன.
இந்த முன்னெடுப்பானது உணவுப் பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் பருவநிலை தழுவல் ஆகியவற்றை தேசிய பருவநிலைத் திட்டங்களில் ஒருங்கிணைப்பதையும், தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDCs) பாரிஸ் ஒப்பந்தத்துடன் சீரமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வளரும் நாடுகள் விவசாயிகளை உள்ளடக்கிய உத்திகளைப் பின்பற்றவும், பருவ நிலை நிதியைப் பெறுவதற்கான அணுகலை மேம்படுத்தவும் இது முற்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெற்ற COP27 மாநாட்டில் தொடங்கப்பட்ட பல-பங்குதாரர் முன்னெடுப்பான 'நிலையான மாற்றத்திற்கான உணவு மற்றும் வேளாண்மை (FAST) கூட்டாண்மையின்' கீழ் இந்த முன்னெடுப்பு முன் மொழியப் பட்டுள்ளது.
FAST கூட்டாண்மையானது மக்கள், பருவநிலை மற்றும் இயற்கையின் நலனுக்காக 2030 ஆம் ஆண்டிற்குள் விவசாயம் மற்றும் உணவு முறைமைகளின் மாற்றத்தை துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிதிக்கான அணுகல், அறிவு மற்றும் திறன் மேம்பாடு, மற்றும் கொள்கை ஆதரவு மற்றும் உரையாடல் ஆகியவை இதன் மூன்று தூண்களாகும்.