TNPSC Thervupettagam

NSE குறியீட்டுத் தொகுப்பு விரிவாக்கம் 2026

June 24 , 2026 9 days 92 0
  • இந்தியாவின் 'NSE இண்டிசஸ் லிமிடெட்' நிறுவனமானது 11 புதிய துறை சார்ந்த குறியீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் அதன் மொத்த துறைசார் குறியீடுகளின் எண்ணிக்கை 34 ஆக விரிவடைந்துள்ளது.
  • இந்தக் குறியீடுகளை இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையின் (NSE) துணை நிறுவனமான NSE இண்டிசஸ் லிமிடெட் அறிமுகப்படுத்தியது.
  • இந்தப் புதிய குறியீடுகள் இந்தியாவில் மின்சாரம், சில்லறை வர்த்தகம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC), காப்பீடு, மருத்துவமனைகள் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகளை உள்ளடக்கியுள்ளன.
  • இந்தியாவில் உள்ள சொத்து மேலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் நுணுக்கமான அளவுகோல்களை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
  • இந்தக் குறியீடுகளை பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFs), குறியீட்டு நிதிகள் மற்றும் பிற செயலற்ற முதலீட்டு தயாரிப்புகளில் பயன்படுத்தலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்