மதிப்பு அடிப்படையிலான மற்றும் நெறிமுறை சார்ந்த முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக, இந்தியாவில் BSE குறியீட்டுச் சேவைகளானது 'BSE சாத்விக் 100 குறியீட்டை' அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தக் குறியீடு BSE 500 குறியீட்டிலிருந்து பெறப்பட்டது ஆகும் என்பதோடு இது தூய்மை, பொறுப்புணர்வு மற்றும் நெறிமுறை நடத்தை ஆகிய "சாத்விக்" கொள்கைகளுக்கு இணங்கச் செயல்படும் நிறுவனங்களை மையமாகக் கொண்டு உள்ளது.
இது பாம்பே பங்குச் சந்தையின் (BSE) முழுச் சொந்தமான துணை நிறுவனமான BSE இண்டெக்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இக்குறியீடு சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுமை (ESG) பாணி முதலீட்டிற்காக வடிவமைக்கப் பட்டுள்ளதுடன் இது பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFs) மற்றும் குறியீட்டு நிதிகள் போன்ற செயலற்ற முதலீட்டு தயாரிப்புகளை ஆதரிக்கிறது.
இக்குறியீட்டில் நிதிச் சேவைகள் துறை அதிக மதிப்பைக் கொண்டுள்ளது; அதைத் தொடர்ந்து நுகர்வோர் விருப்பத்தேர்வு மற்றும் எரிசக்தி துறைகள் உள்ளன.