TNPSC Thervupettagam

திறன்மிகு விதை பூச்சுத் தொழில்நுட்பம்

June 24 , 2026 9 days 130 0
  • பயிர் நிலைநிறுத்தத்தை மேம்படுத்துவதற்கும், பருவநிலை அழுத்தத்திற்கு எதிரான பின்னடைவுத் திறனை அதிகரிப்பதற்கும் ICAR-இந்திய எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிறுவனமானது காப்புரிமை பெற்ற 'திறன்மிகு விதை நேர்த்தி தொழில் நுட்பத்தை' உருவாக்கியுள்ளது.
  • மக்கும் தன்மையுடைய, உயிரிபாலிமர் அடிப்படையிலான விதை மேம்பாட்டுத் தொழில்நுட்பமான இது ஒற்றை விதைப் பூச்சு மூலம் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் உயிரியல் ஆதரவை வழங்குகிறது.
  • இந்த விதை நேர்த்தியானது நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள், ஊட்டச்சத்துக்கள், பயிர்ப் பாதுகாப்பு முகவர்கள் மற்றும் தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் சேர்மங்களைக் கொண்டுள்ளதுடன் இவை முளைக்கும் போது வேர்களுக்கு அருகில் வெளியிடப்படுகின்றன.
  • இந்தத் தொழில்நுட்பம் பருவநிலை சகிப்புத்தன்மை கொண்ட விவசாயத்தை ஆதரிப்பதையும், மானாவாரி விவசாயத்தில் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதையும், வறட்சி, ஒழுங்கற்ற பருவமழை, வெப்பநிலை அழுத்தம், மண் சிதைவு மற்றும் பூச்சிகளிலிருந்து பயிர்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், நறுமணப் பொருட்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஏற்ப இதனைத் தனிப்பயனாக்கலாம்.
  • பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், வழக்கமான விதைகளுடன் ஒப்பிடச் செய்கையில், சோளம், கொண்டைக்கடலை, பருத்தி, கடுகு மற்றும் துவரை போன்ற பயிர்களில் உற்பத்தித்திறன் 12% முதல் 37% வரை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்