துருக்கி அரசானது, கனக்கலே நகருக்கு அருகே ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக டார்டனெல்லஸ் நீர்ச்சந்தியை தற்காலிகமாக மூடியது.
இந்த நீர்ச்சந்தியானது, ஏஜியன் கடலை மர்மாரா கடலுடன் இணைக்கின்ற, ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையேயான கனரக வணிகக் கப்பல் போக்குவரத்தை ஆதரிக்கின்ற ஒரு முக்கிய சர்வதேச நீர்வழிப்பாதையாகும்.
அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி 2024 ஆம் ஆண்டில் சுமார் 46,000 கப்பல்கள் டார்டனெல்லஸ் வழியாகக் கடந்து சென்றன.