TNPSC Thervupettagam

டிஜிட்டல் சொத்துப் பதிவு

August 19 , 2026 6 days 108 0
  • வீட்டு மனைகள் மற்றும் குடியிருப்புகளை முதல்முறையாக பதிவு செய்வதற்கான கட்டாய 'வருகையில்லா ஆவணப்பதிவு மூலம் பதிவு செய்தல்’ (Presence-less Registration) முறையை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சாட்சிகள் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லாமலேயே ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
  • வாங்குபவர், விற்பவர் மற்றும் சாட்சிகளின் ஆதார் அட்டைகள் இணையவழியில் பதிவேற்றப்பட்டு சரிபார்க்கப்படும்.
  • பதிவாளர்கள் 24 மணி நேரத்திற்குள் ஆவணங்களைப் பதிவு செய்ய வேண்டும், அல்லது திருத்தத்திற்காக அனுப்ப வேண்டும் அல்லது அவற்றை நிராகரிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பக்கத்திலும் விரைவு பதில் (QR) குறியீடு இருக்கும், மேலும் மாறும் ஐந்து வண்ண ஒப்புதல் முறையானது போலி ஆவணங்களைத் தடுக்க உதவும்.
  • பதிவு செய்த பிறகு, டிஜிட்டல் ஆவணம் பயனாளியின் உள்நுழைவில் (login) கிடைக்கும், அதே சமயம் சான்றளிக்கப்பட்ட நகல்களை 60 நாட்களுக்குப் பிறகு பெற்றுக் கொள்ளலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்