மாசடைவதிலிருந்து தாமிரபரணி நதியைப் பாதுகாக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழ்நாட்டின் தாமிரபரணி (பொருநை) நதியை ஒரு தெய்வமாக அறிவித்து, அதற்கு ஒரு சட்டப்பூர்வ நபருக்கான அந்தஸ்தை வழங்கி உள்ளது.
இந்த தீர்ப்பானது 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சிவானுபாண்டியன் எதிர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வழக்கில் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு, நதிக்கரையில் இறுதிச் சடங்குகள் மற்றும் கழிவுகளைக் கொட்டுவதால் ஏற்படும் மாசுபாட்டை சுட்டிக்காட்டியது.
வெறும் மூன்று வாரங்களில், அதிகாரிகள் நதியிலிருந்து சுமார் 90 டன் துணிகள், 2 டன் சாம்பல் மற்றும் 3 டன் பிற கழிவுகளை சேகரித்தனர்.
மேலும் மாசுபடுவதைத் தடுக்க குறிப்பிட்ட பாதுகாப்பு நிபந்தனைகள் பின்பற்றப் படுவதை உறுதி செய்ய மாநில அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த முடிவு, இயற்கையின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்கு அதிக சட்ட முக்கியத்துவத்தை அளிக்கும் 'பூமி நீதித்துறை' (Earth Jurisprudence) கொள்கையுடன் தொடர்புடையது.
முன்னதாக, உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டில் கங்கை மற்றும் யமுனை நதிகளை சட்டப்பூர்வ வாழும்நதிகளாக/நபர்களாக அறிவித்தது, ஆனால் நடைமுறை மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக உச்ச நீதிமன்றம் பின்னர் அந்த உத்தரவுக்கு தடை விதித்தது.
கட்டுரையில் விவாதிக்கப்பட்ட வழக்கில், மனிதரல்லாத மற்றும் உயிரற்ற பொருட்களுக்கு சட்டப்பூர்வ ஆளுமையை நீட்டிப்பது சாத்தியமில்லை என்று 2023 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனவே தாமிரபரணி நதிக்கான தீர்ப்பானது, மாசடைவதிலிருந்து நதியைப் பாதுகாக்க முற்படும் அதே வேளையில், நதியை ஒரு தெய்வமாக அங்கீகரிப்பதன் மூலம் வேறுபட்ட சட்ட வழியைப் பின்பற்றுகிறது.