ஆரோக்கியம் சார்ந்த பலன்களைக் கொண்டிருப்பதால் "பல்பயன் கொண்ட பழம்" என்று அழைக்கப்படும் டிராகன் பழத்தின் சாகுபடியை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குஜராத் அரசானது சமீபத்தில் டிராகன் பழத்தின் பெயரை கமலம் (தாமரை) என்று மாற்றி, அதைப் பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையை அறிவித்தது.
இந்த அயல்நாட்டுப் பழ வகைகளை நடவு செய்யத் தயாராக இருக்கும் விவசாயிகளுக்கு ஹரியானா அரசும் மானியம் வழங்குகிறது.
இந்தப் பழம் பொதுவாக தாய்லாந்து, இலங்கை, இஸ்ரேல் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் விளைகிறது.
ஆனால் தற்போது இந்தப் பழ வகை இந்தியாவிலும் மெல்ல மெல்ல விளைவிக்கப்பட்டு வருகிறது.