டி.என்.ஏ தொழில்நுட்ப (பயன்பாடு மற்றும் உபயோகம்) ஒழுங்குமுறை மசோதா 2019
January 11 , 2019 2398 days 817 0
மக்களவை ஒரு சிறிய விவாதத்திற்குப் பிறகு "டிஎன்ஏ தொழில்நுட்ப (பயன்பாடு மற்றும் உபயோகம்) ஒழுங்குமுறை மசோதாவை" நிறைவேற்றியிருக்கின்றது.
இந்த மசோதா டிஎன்ஏ தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் உபயோகம், காணாமல் போனவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள், விசாரணைக் கைதிகள் மற்றும் அடையாளம் தெரியாமல் இறந்து போன நபர்கள் ஆகியோரின் அடையாளம் காணுதல் ஆகியவற்றை ஏற்படுத்துதவதற்காக மேலே கூறியவற்றை போன்றவற்றை முறைப்படுத்துகின்றது.
இம்மசோதாவின் முக்கிய உட்கூறுகள் டிஎன்ஏ ஒழுங்குமுறை மன்றத்தை ஏற்படுத்துவது, டிஎன்ஏ சோதனை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் டிஎன்ஏ பரிசோதனைக் கூடங்களின் அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
இந்த மசோதாவில் உள்ளவாறு தேசிய மற்றும் பிராந்திய டிஎன்ஏ தரவுத்தளங்களை ஏற்படுத்துவது தடயவியல் விசாரணைகளில் உதவிடும்.