‘டெஃப் கனெக்ட் 2019’ (பாதுகாப்பு இணைப்பு) நிகழ்ச்சியின் தொடக்க அமர்வை மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.
இது புது தில்லியில் புதுமைக்கான பாதுகாப்பு சிறப்புத்துவ (iDEX) முயற்சியின் சாதனைகளை வெளிப்படுத்துவதாகும்.
iDEX ஆனது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்திய இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தீர்வுகளை வழங்குவதற்காக கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களை ஈடுபடுத்துவதன் மூலம், பாதுகாப்பு மற்றும் விண்வெளியில் புதுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை வளர்ப்பதற்கான ஒரு சூழல் அமைப்பாக இது விளங்குகின்றது.
iDEX ஆனது “பாதுகாப்பு கண்டுபிடிப்பு அமைப்பினால்” (Defence Innovation Organisation” - DIO) நிதியுதவி அளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றது.
DIO என்பது நிறுவனங்கள் சட்டம் 2013 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பு ஆகும்.
இதற்கு இந்துஸ்தான் வானூர்தி நிறுவனம் மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆகியவை நிதியுதவி அளிக்கின்றன.