TNPSC Thervupettagam

டெவில்ஸ் ஹோல் குகைச் சிறுமீன் எண்ணிக்கை மீட்சி

November 26 , 2026 12 hrs 0 min 49 0
  • அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள அழிந்து வரும் டெவில்ஸ் ஹோல் குகைச் சிறுமீன்களின் எண்ணிக்கை, 2025 ஆம் ஆண்டு அக்டோபரில் 69 ஆக இருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு அக்டோபரில் 137 ஆக அதிகரித்துள்ளது.
  • சைப்ரினோடான் டயபோலிஸ் எனப்படும் இம்மீன், நெவாடாவின் டெத் வேலி தேசியப் பூங்காவில் உள்ள நீர் நிரம்பிய சுண்ணாம்புக் குகையான டெவில்ஸ் ஹோலில் மட்டுமே இயற்கையாகக் காணப்படுகிறது.
  • உணவு வழங்கல் மற்றும் இனப்பெருக்க வாழ்விடத்தைச் சேதப்படுத்திய நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இதன் எண்ணிக்கை சுமார் 20 மீன்களாகக் குறைந்தது.
  • மீட்பு நடவடிக்கைக்காக 2025 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அறிவியலாளர்கள் வளர்ப்பகத்தில் வளர்க்கப்பட்ட 72 குகைச் சிறுமீன்களை டெவில்ஸ் ஹோலில் விடுவித்தனர்.
  • இது 1967 ஆம் ஆண்டில் அழிந்து வரும் இனமாகப் பட்டியலிடப்பட்டது; மேலும் நிலநடுக்கங்கள், நீர் மட்ட மாற்றங்கள் மற்றும் வாழ்விட இடையூறுகளால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்