TNPSC Thervupettagam

ரோஹிங்கியா இனப்படுகொலை வழக்கில் ஐ.நா நடவடிக்கை

November 26 , 2026 12 hrs 0 min 45 0
  • 2017 ஆம் ஆண்டு ரோஹிங்கியா இனப்படுகொலை வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) தீர்ப்பை மியான்மர் நிராகரித்ததைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (UNSC) கூட்டத்தைக் கூட்ட பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் ரோஹிங்கியா சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை தொடர்பாக மியான்மருக்கு எதிராக காம்பியா நாடு இனப்படுகொலை வழக்கைத் தொடர்ந்தது.
  • சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இறுதியானவை மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கட்டுப்படுத்தக்கூடியவை என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
  • சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு தரப்பு பின்பற்றத் தவறினால், மற்றொரு தரப்பு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை அணுக ஐ.நா சாசனத்தின் சரத்து 94(2) அனுமதிக்கிறது.
  • தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா பாதுகாப்பு சபை பரிந்துரைக்கலாம் அல்லது தீர்மானிக்கலாம்.
  • எந்தவொரு முக்கியத் தீர்மானத்திற்கும் குறைந்தது ஒன்பது ஆதரவு வாக்குகளும், ஐந்து நிரந்தர உறுப்பினர்களின் வீட்டோ (மறுப்பு) அதிகாரம் பயன்படுத்தப்படாமலும் இருக்க வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்