TNPSC Thervupettagam

டேபிள்டாப் விமான நிலையங்கள் மற்றும் கோழிக்கோடு நிகழ்வு

August 11 , 2020 1837 days 743 0
  • சிறப்பு வந்தே பாரத்திட்டத்தின் போது இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது கோழிக்கோடு ஓடு தளத்தைத் தாண்டி, ஒரு பள்ளத்திற்குள் விழுந்தது.
  • 2010 ஆம் ஆண்டில், இதே போன்ற ஒரு விபத்தானது மங்களூரு விமான நிலையத்தில் நிகழ்ந்தது.
  • டேபிள்டாப் விமானநிலையம் என்பது மலையின் மேற்பரப்பு அல்லது பீடபூமியின் உச்சியில் கட்டப்பட்டுள்ள ஒரு விமான நிலையமாகும்.
  • இந்த விமான நிலையங்களின் ஓடுபாதையானது ஒரு முனை அல்லது அதன் இரு முனை ஆகியவற்றில் ஒரு பள்ளத்தைக் கொண்டுள்ளதாக இருக்கும்.
  • சிம்லா மற்றும் குலு (இமாச்சலப் பிரதேசம்), லெங்புய் (மிசோரம்), பாக்யாங் (சிக்கிம்), கோழிக்கோடு மற்றும் கண்ணூர் (கேரளா), மங்களூரு (கர்நாடகா) ஆகியவை இந்தியாவில் உள்ள டேபிள்டாப் விமான நிலையங்களாகும்.
  • நேபாளத்தில் உள்ள காத்மண்டு மற்றும் பூடானில் உள்ள பாரோ ஆகியவை இந்தியாவிற்கு வெளியே அமைந்த இதர டேபிள்டாப் விமான நிலையங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்