101 பாதுகாப்புத் துறை உபகரணங்கள் இறக்குமதி மீதான தடை
August 11 , 2020 1837 days 839 0
101 உபகரணங்களைக் கொண்ட பட்டியலானது மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளது.
இது ஆத்ம நிர்பர் பாரத் அபியானின் கீழ் இந்தியாவைச் சுயசார்பு கொண்ட ஒரு நாடாக உருவாக்குவதற்காக மேற்கொள்ளப் படுகின்றது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட பாதுகாப்பு கொள்முதல் நடைமுறையானது பாதுகாப்பு உபகரணத்தில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற முன்னெடுப்பிற்கு ஆதரவளிக்கின்றது.
வாங்குதல் என்ற (உலகளவில் இந்தியாவில் தயாரிப்போம்) ஒரு புதிய வகையானது குறைந்த பட்சம் 50% உள்நாட்டுப் பொருட்களுடன் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.