தகவல் தொழில்நுட்ப இறக்குமதி மீதான சுங்க வரி விதிப்பு குறித்த சர்ச்சை
April 21 , 2023 832 days 404 0
சில தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பப் பொருட்கள் மீது அதிக இறக்குமதி வரிகளை விதிப்பதன் மூலம் இந்தியா வர்த்தக விதிகளை மீறியதாக உலக வர்த்தக அமைப்பு தீர்ப்பளித்தது.
ஜெனீவாவில் அமைந்துள்ள இந்த பலதரப்பு அமைப்பின் தீர்ப்பினை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்ய உள்ளது.
2017 ஆம் ஆண்டில் கைபேசிகள் மற்றும் வேறு சில தொழில்நுட்பப் பொருட்கள் மீது 10 சதவீதச் சுங்க வரியை இந்தியா விதித்தது தொடர்பான ஒரு சர்ச்சையை உலக வர்த்தக அமைப்பு விசாரித்து வந்தது.
இந்தியா பின்னர் சுங்க வரியை 10 முதல் 20 சதவீதமாக உயர்த்திய நிலையில், இது அமெரிக்கா, சீனா, தைவான், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடனான வர்த்தகத்தினை நிலை குலைத்தது.
இந்தியா இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காகவும், உள்நாட்டுத் தொழில்நுட்பப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும் 2017 ஆம் ஆண்டு முடிவு மேற் கொள்ளப்பட்டதாக வாதிட்டு வருகிறது.
மேலும், இந்தத் தொழில்நுட்பத் தயாரிப்புகள் 1996 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை என்று கூறியது.