எகிப்தின் தக்லா சோலையில் (Dakhla Oasis) உள்ள பிர் அல்-ஷகாலாவில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 4 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த 1,700 ஆண்டுகள் பழமையான பிரமிடு வடிவக் கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சேற்றுச் செங்கற்களால் ஆன இந்தக் கல்லறை ஒரு திருமணமான தம்பதியினருக்காகக் கட்டப்பட்டுள்ளதுடன் இது எகிப்திய, கிரேக்க மற்றும் ரோமானிய கலாச்சார மரபுகளை ஒருங்கிணைக்கிறது.
எகிப்திய பாணியிலான இதன் நுழைவாயில் 14 படிகள், ஹைரோகிளிஃபிக் இறுதிச் சடங்கு மந்திரங்கள், இறக்கைகள் கொண்ட சூரிய வட்டு மற்றும் இரண்டு நாகங்களைக் கொண்டுள்ளது.
கல்லறையின் உள்ளே ஒரு கல் தூணில் பண்டைய கிரேக்கத்தில் 19 வரிகள் கொண்ட இறுதிச்சடங்கு கவிதை கண்டுபிடிக்கப்பட்டது.
மட்பாண்டங்கள், மணற்கல்லால் ஆன படையல் மேசை, ஒரு சுத்திகரிப்பு தொட்டி மற்றும் ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்டைனைக் காட்டும் வெண்கல நாணயம் ஆகியவற்றையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
தாலமிக் மற்றும் ரோமானிய காலங்களில் தக்லா சோலையின் பண்டைய தலைநகரான மோதிஸின் (Mothis) நெக்ரோபோலிஸின் ஒரு பகுதியாக பிர் அல்-ஷகாலா இருந்தது.