TNPSC Thervupettagam

சர்வதேச காபி தினம் 2026 - அக்டோபர் 01

October 3 , 2026 3 days 48 0
  • சர்வதேச காபி அமைப்பின் (ICO) பிரசாரமான Coffee is Part of the Solution என்ற கருத்துருவுடன் இந்த நாள் அனுசரிக்கப்பட்டது.
  • உலகம் முழுவதும் சுமார் 12.5 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு காபி வருமானம் அளிக்கிறது என்று சர்வதேச காபி அமைப்பு (ICO) கூறுகிறது.
  • இந்தியாவில் காபி முக்கியமாக கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் விளைவிக்கப் படுகிறது. மேலும் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் இது பயிரிடப்படுகிறது.
  • இந்தியா 2024-25 ஆம் ஆண்டில் 1,05,700 டன் அராபிகா மற்றும் 2,57,800 டன் ரோபஸ்டா உட்பட சாதனை அளவாக 3,63,500 மெட்ரிக் டன் காபியை உற்பத்தி செய்துள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டில் மறுஏற்றுமதி உட்பட 3,88,925 டன் காபியை 126 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
  • தனிநபர் காபி நுகர்வில் ஃபின்லாந்து ஆண்டுக்கு சுமார் 11.9 கிலோவுடன் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது, அதைத் தொடர்ந்து நார்வே மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்