TNPSC Thervupettagam

தக்லா தொல்பொருள் கண்டுபிடிப்பு

October 3 , 2026 3 days 79 0
  • எகிப்தின் தக்லா சோலையில் (Dakhla Oasis) உள்ள பிர் அல்-ஷகாலாவில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 4 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த 1,700 ஆண்டுகள் பழமையான பிரமிடு வடிவக் கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • சேற்றுச் செங்கற்களால் ஆன இந்தக் கல்லறை ஒரு திருமணமான தம்பதியினருக்காகக் கட்டப்பட்டுள்ளதுடன் இது எகிப்திய, கிரேக்க மற்றும் ரோமானிய கலாச்சார மரபுகளை ஒருங்கிணைக்கிறது.
  • எகிப்திய பாணியிலான இதன் நுழைவாயில் 14 படிகள், ஹைரோகிளிஃபிக் இறுதிச் சடங்கு மந்திரங்கள், இறக்கைகள் கொண்ட சூரிய வட்டு மற்றும் இரண்டு நாகங்களைக் கொண்டுள்ளது.
  • கல்லறையின் உள்ளே ஒரு கல் தூணில் பண்டைய கிரேக்கத்தில் 19 வரிகள் கொண்ட இறுதிச்சடங்கு கவிதை கண்டுபிடிக்கப்பட்டது.
  • மட்பாண்டங்கள், மணற்கல்லால் ஆன படையல் மேசை, ஒரு சுத்திகரிப்பு தொட்டி மற்றும் ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்டைனைக் காட்டும் வெண்கல நாணயம் ஆகியவற்றையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
  • தாலமிக் மற்றும் ரோமானிய காலங்களில் தக்லா சோலையின் பண்டைய தலைநகரான மோதிஸின் (Mothis) நெக்ரோபோலிஸின் ஒரு பகுதியாக பிர் அல்-ஷகாலா இருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்