5வது தணிக்கை திவாஸ் ஆனது 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.
இது இந்தியாவின் பொதுக் கணக்கின் பாதுகாவலராக விளங்கும் தலைமைக் கணக்காளர் மற்றும் தணிக்கையாளரின் (CAG) பங்கை கௌரவிக்கிறது.
இந்தியாவின் முதல் தலைமை தணிக்கையாளரான சர் எட்வர்ட் டிரம்மண்ட் 1860 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியன்று பொறுப்பேற்றார்.
இந்தியாவின் தணிக்கை முறை 1858 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் கணக்குகளைச் சரி பார்க்கும் ஒரு துறையுடன் தொடங்கியது.
148வது சரத்தின் கீழான ஓர் அரசியலமைப்பு அமைப்பாக உள்ள தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) அலுவலகம் மத்திய மற்றும் மாநில அரசின் கணக்குகளை தணிக்கை செய்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Guardian of the Public Purse" என்பது ஆகும்.
இரண்டு புதியத் தணிக்கைக் குழுக்கள், மத்திய வருவாய் தணிக்கை (CRA) மற்றும் மத்திய செலவினத் தணிக்கை (CEA), 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று தொடங்கப் படும்.