சுமார் 12,000 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த எத்தியோப்பியாவின் ஹயிலி குப்பி எரிமலை சமீபத்தில் வெடித்தது.
இந்த கேடய வகை எரிமலையானது, கிழக்கு ஆப்பிரிக்கப் பிளவு அமைப்பிற்குள் (EARS) உள்ள அஃபார் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது என்பதோடுஇது கண்டத் தட்டுகள் (டெக்டோனிகல்) ரீதியாகச் செயல்படும் விலகும் கண்டத் தட்டு எல்லையாகும்.
சாம்பல் புகையானது ஏமன், ஓமன், அரேபிய கடல் முழுவதும் பரவி, தற்போது மேற்கு இந்தியாவை நோக்கி நகர்வதால், இது விமானப் போக்குவரத்து மற்றும் வளிமண்டலம் சார்ந்த கவலைகளை எழுப்புகிறது.