TNPSC Thervupettagam

தணிக்கை திவாஸ் - நவம்பர் 16

November 28 , 2025 14 days 65 0
  • 5வது தணிக்கை திவாஸ் ஆனது 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.
  • இது இந்தியாவின் பொதுக் கணக்கின் பாதுகாவலராக விளங்கும் தலைமைக் கணக்காளர் மற்றும் தணிக்கையாளரின் (CAG) பங்கை கௌரவிக்கிறது.
  • இந்தியாவின் முதல் தலைமை தணிக்கையாளரான சர் எட்வர்ட் டிரம்மண்ட் 1860 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியன்று பொறுப்பேற்றார்.
  • இந்தியாவின் தணிக்கை முறை 1858 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் கணக்குகளைச் சரி பார்க்கும் ஒரு துறையுடன் தொடங்கியது.
  • 148வது சரத்தின் கீழான ஓர் அரசியலமைப்பு அமைப்பாக உள்ள தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) அலுவலகம் மத்திய மற்றும் மாநில அரசின் கணக்குகளை தணிக்கை செய்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Guardian of the Public Purse" என்பது ஆகும்.
  • இரண்டு புதியத் தணிக்கைக் குழுக்கள், மத்திய வருவாய் தணிக்கை (CRA) மற்றும் மத்திய செலவினத் தணிக்கை (CEA), 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று தொடங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்