ஆக்ஸ்போர்டின் ஆண்டின் சிறந்த சொல்லிற்கான தேர்வுப் பட்டியல் 2025
November 29 , 2025 13 days 61 0
ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் ஆண்டின் சிறந்த சொல்லிற்கான 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுப் பட்டியலில் Aura Farming, Biohack, மற்றும் Rage Bait ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ளன.
Aura Farming என்பது ஈர்ப்பு மிக்க பொதுப் பிம்பத்தை வளர்ப்பது என்று பொருள்படும் ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
Biohack என்பது வாழ்க்கை முறை, உணவு முறை, உடற்பயிற்சி அல்லது தொழில்நுட்பம் மூலம் உடல் அல்லது மன செயல்திறனை மேம்படுத்துவதைக் குறிக்கும் ஒரு வினைச் சொல் ஆகும்.
Rage Bait என்பது கோபம் அல்லது சீற்றத்தைத் தூண்டுவதற்காக வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்ட இயங்கலை உள்ளடக்கத்தைக் குறிக்கும் ஒரு பெயர்ச்சொல் ஆகும்.