TNPSC Thervupettagam

தபால் துறையில் CPGRAMS சீர்திருத்தங்கள்

September 30 , 2019 2135 days 702 0
  • தபால் துறையில் மையப்படுத்தப்பட்ட பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பை (Centralised Public Grievances Redress and Monitoring System - CPGRAMS) பணியாளர், பொது மக்கள் குறைபாடு மற்றும் ஓய்வூதியங்கள் துறையின் இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.
  • நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைபாட்டுத் துறையின் புதிய CPGRAMS 7.0 என்ற பதிப்பை www.pgportal.nic.in என்ற இணைய வாயிலின் மூலம் அணுக முடியும்.
  • பொது மக்களிடம் இருந்து குறைகளைப் பெற்று, நிவர்த்தி செய்து அதனைக் கண்காணிக்கும் ஒரு இணையதள நடைமுறை இதுவாகும்.
  • இது தபால் துறையின் செயலாக்க நேரத்தில் 50 சதவிகிதத்தைக் குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்