TNPSC Thervupettagam

பள்ளிக் கல்வி தரக் குறியீடு

October 1 , 2019 2134 days 2595 0
  • நிதி ஆயோக் அமைப்பால் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வி தரக் குறியீட்டில் (School Education Quality Index - SEQI) கேரள மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
  • SEQI ஆனது நிதி ஆயோக்கினால் பின்வருவனவற்றுடன் இணைந்து ஒரு கூட்டுச்  செயல்முறை  மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
    • உலக வங்கி
  • இந்தக் குறியீடானது பள்ளிக் கல்வித் துறையில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குறியீட்டுக்கான தரவானது மூன்று பிரிவுகளுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது: பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள்.
பெரிய மாநிலங்கள்
  • 2016 – 2017 ஆகிய ஆண்டுகளுக்கான குறியீட்டில் கேரளா 76.6 சதவீதத்துடன் முதலிடத்தையும் உத்தரப் பிரதேசம் 36.4 சதவீதத்துடன் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.
சிறிய மாநிலங்கள்
  • இந்தக் குறியீட்டில் மணிப்பூர் (68.8 சதவீதம்) முதலிடத்தையும் அருணாச்சலப்  பிரதேசம் (24.6 சதவீதம்) கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.
யூனியன் பிரதேசங்கள்
  • இந்தக் குறியீட்டில் சண்டிகர் (82.9 சதவீதம்) முதலிடத்திலும் லட்சத் தீவுகள் கடைசி இடத்திலும் (31.9 சதவீதம்) உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்