TNPSC Thervupettagam

தபால் வாக்கு முறை

December 20 , 2020 1614 days 1036 0
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது சில நாடுகளில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக (NRI – Non Resdient Indian) தபால் வாக்குகளைச் சோதனை அடிப்படையில் அறிமுகப் படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்தப் பரிந்துரையானது அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்சு மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் NRI வாக்காளர்களுக்காக முதன்முறையாக செயல்படுத்தப்பட உள்ளது.
  • மொத்தமுள்ள 1.18 இலட்சம் NRI வாக்காளர்களில், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் (89,000ற்கும் மேல்) கேரளாவில் பதிவு செய்யப் பட்டுள்ளனர்.
  • இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் (ஏறத்தாழ 7500) ஆந்திரப் பிரதேசத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளனர்.
  • இந்தியாவின் வெளிநாடு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கையானது 16 மில்லியன் மக்களுடன் உலகில் மிகப் பெரியதாக விளங்குகின்றது.
  • NRI மக்களுக்கான வாக்குரிமையானது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 என்ற சட்டத்தில் ஒரு திருத்தம் செய்ததன் மூலம் 2011 ஆம் ஆண்டில் தான் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • NRI வாக்காளர்கள் தங்களின் கடவுச் சீட்டில் குறிப்பிடப் பட்டுள்ள அவர்களது வசிப்பிடம் உள்ள தொகுதியில் மட்டுமே சென்று வாக்களிக்க முடியும்.
  • இவர்கள் நேரில் சென்று மட்டுமே வாக்களிக்க முடியும். இவர்கள் தங்களது அடையாளத்திற்காக வேண்டி வாக்களிக்கும் இடத்தில் தங்கள் அசல் கடவுச் சீட்டை அங்குள்ள அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்