தமிழகத்தில் சுழிய எண்ணிக்கையிலான கோவிட் பாதிப்பு பதிவு
June 29 , 2023 908 days 427 0
2023 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதியன்று தமிழ்நாடு மாநிலத்தில் ஒரு கோவிட் தொற்றுப் பாதிப்பு கூட பதிவாகவில்லை.
2020 ஆம் ஆண்டில் பெருந்தொற்றுப் பாதிப்பு ஆரம்பித்ததில் இருந்து தமிழ்நாடு மாநிலத்தில் புதிய கோவிட் பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படாதது இதுவே முதல் முறையாகும்.
2020 ஆம் ஆண்டு மார்ச் 07 ஆம் தேதியன்று முதலாவது கோவிட் பாதிப்பு பதிவாகியது.
தமிழகத்தில் கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை 36,10,593 ஆக உள்ளது.
கோவிட் பரிசோதனையில், தமிழகத்தில் 7.09 கோடிக்கும் அதிகமான அளவு மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளன.
கோவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,72,497 ஆக உள்ளது.