TNPSC Thervupettagam

தமிழக அமைச்சர்களின் முன்னுரிமைப் பட்டியல்

June 4 , 2026 15 days 210 0
  • மாநில அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான முன்னுரிமைப் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
  • முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு இந்த முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் முதலமைச்சர் முதலிடத்திலும், அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், பி. வெங்கடரமணன், ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு மற்றும் எஸ். கீர்த்தனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
  • தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) சேர்ந்த இந்த அமைச்சர்கள் 2026 ஆம் ஆண்டு மே 10 அன்று பதவியேற்றுக் கொண்டனர்.
  • கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நான்கு அமைச்சர்கள் முன்னுரிமைப் பட்டியலில் 11 முதல் 14 வரையிலான இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்