நீர்வாழ் உயிரின வளர்ப்பு மீதான NGT-யின் அதிகார வரம்பு
June 5 , 2026 14 days 143 0
கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையச் (CAA) சட்டம், 2005-இன் கீழ் நிர்வகிக்கப் படும் கடலோர மீன்வளர்ப்பு அலகுகள் தொடர்பான சிக்கல்கள் மீது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு (NGT) அதிகார வரம்பு இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தேசியப் பசுமைத் தீர்ப்பாயச் (NGT) சட்டம், 2010-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள சட்டங்களில் CAA சட்டம், 2005 இடம்பெறவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
தமிழ்நாடு கடற்கரையில் இயங்கும் இறால் பொறிப்பகங்கள் தொடர்பாக 2022 ஆம் ஆண்டு NGT பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.
கடலோர மீன்வளர்ப்பு அலகுகள் மத்திய அரசு வெளியிட்டுள்ள கடலோர ஒழுங்கு முறை மண்டல (CRZ) அறிவிப்புகளுக்கு இணங்க வேண்டுமா என்பதை உயர் நீதிமன்றம் ஆராயும்.
இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட (Suo motu) நீதிப்பேராணை மனுவாக பதிவு செய்யப்படும்.
வெட்டுவாங்கேணி மற்றும் மரக்காணத்தில் உள்ள இறால் பொறிப்பகங்கள் NGT-யின் வழிகாட்டுதல்களை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களில் இருந்து இந்த வழக்கு எழுந்தது.