TNPSC Thervupettagam

மின்னணு-சிறைச்சாலைகள்/ E-Prisons விடுதலைத் தொகுதி

June 5 , 2026 14 days 154 0
  • தகுதியுள்ள கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் செயல்முறையை தானியங்குபடுத்துவதற்காக, 'மின்னணு-சிறைச்சாலைகள் / E-Prisons  முன்விடுதலை செயலாக்கத் தொகுதியை' செயல்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவால் (NALSA) உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதி, சென்னை புழல் மத்திய சிறையில் சோதனைத் திட்டமாகச் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இது முன்கூட்டியே விடுதலை பெறத் தகுதியுள்ள கைதிகளை அடையாளம் கண்டு, நான்கு மாதங்களுக்கு முன்பே அதற்கான செயல்முறையைத் தொடங்குகிறது.
  • இந்த அமைப்பு கைதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் குறுஞ்செய்தி (SMS) மற்றும் வாட்ஸ்அப்/புலனம் மூலம் வழக்கமான தகவல்களை வழங்குகிறது.
  • இது கோப்புகளை காகிதமில்லா முறையில் டிஜிட்டல் வடிவில் செயல்படுத்துவதை சாத்தியமாக்குவதோடு இதன் மூலம் சிறை நிர்வாகத்தில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கவும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்