தமிழக ஆளுநரின் பணிகளைக் கூடுதலாக கவனிப்பதற்காக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் 2026 ஆம் ஆண்டு மார்ச் 12 அன்று சென்னை ராஜ்பவனில் பதவியேற்றார்.
கோவாவைச் சேர்ந்த திரு. அர்லேகர், 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் கேரள ஆளுநராகப் பதவியேற்றார்.
அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னாள் ஆளுநர் R.N. ரவி தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு 2026 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று மாநிலத்திலிருந்து புறப்பட்ட அவர் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார்.
R.N. ரவி 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றார்.