TNPSC Thervupettagam

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த முக்கிய தகவல்கள்

May 1 , 2026 14 hrs 0 min 8 0
  • தமிழ்நாட்டுத் தேர்தல் வரலாறு, காலப்போக்கில் வாக்குப்பதிவு முறை மற்றும் அட்டவணையில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களைக் காட்டுகிறது.
  • 1967-ஆம் ஆண்டு தேர்தல் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்ததுடன், திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய தேசிய காங்கிரஸை தோற்கடித்தது, மேலும் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு இடங்கள் 206 லிருந்து 234 ஆக அதிகரித்தன.
  • 1971-ஆம் ஆண்டு தேர்தல் மூன்று நாட்கள் நடைபெற்றது, ஆனால் 1977-ஆம் ஆண்டில் முதன்முறையாக அனைத்து 234 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
  • இருப்பினும், மாநிலம் 1980-ஆம் ஆண்டில் இரண்டு கட்டத் தேர்தலுக்குத் திரும்பியதுடன் 1984 ஆம் ஆண்டு தேர்தல் கோடைக்காலத்திற்குப் பதிலாக ஆண்டின் இறுதியில் நடந்த முதல் தேர்தலாகும்.
  • 1996-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்திய கடைசித் தேர்தல் ஆகும்; மொடக்குறிச்சியில் 1,033 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் வாக்குச் சீட்டு அச்சிடுவது கடினமானதால் அங்கு ஜூன் 1 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
  • 2001-ஆம் ஆண்டில் அனைத்து 234 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில் மேலும் கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்திலும் இவை பயன்படுத்தப்பட்டன.
  • இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பல மாநில தேர்தல் அட்டவணை காரணமாக, 2011 ஆம் ஆண்டுத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கும் (ஏப்ரல் 13) வாக்கு எண்ணிக்கைக்குமான (மே 13) மிக நீண்ட இடைவெளி இருந்தது.
  • 2016-ஆம் ஆண்டில், பெரிய அளவிலான வாக்காளர் லஞ்சப் புகார்கள் காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் முதன்முறையாக வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்