மாநிலத்திற்கு “தமிழ்நாடு” என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தினத்தை நினைவு கூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்வதற்காக 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சி.என். அண்ணாதுரை கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை இந்த நாள் குறிக்கிறது.
இந்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு 1969-ஆம் ஆண்டில் பெயர் மாற்றம் அதிகாரப் பூர்வமாக செயல்படுத்தப்பட்டது.
இதற்கு முன்பு, மொழிவாரி மாநிலங்களை உருவாக்கிய 1956 ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்திற்குப் பிறகும், இம்மாநிலம் மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டது.
இம்மாநிலம் முக்கியமாக தமிழ் பேசும் மக்களுக்கான ஒரு மொழிவாரி மாநிலமாக உருவாக்கப் பட்டது மற்றும் அதன் வளமான தமிழ் மொழி, கலாச்சாரம், இலக்கியம் மற்றும் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது.
மொழிவாரி மாநில மறுசீரமைப்புக்குப் பிறகு 1956-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணம் உருவான நாளாகவும் தமிழ்நாட்டில் நவம்பர் 1 அனுசரிக்கப்படுகிறது.