TNPSC Thervupettagam

தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2026–27

August 8 , 2026 5 days 134 0
  • 2026-27 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத் தாக்கல் செய்தார்.
  • இந்த நிதிநிலை அறிக்கையானது விவசாயிகளின் நலன், நவீன தொழில்நுட்பம், நீர்ப் பாசனம், பயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான வேளாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • வேளாண் இயந்திரமயமாக்கல் முன்னெடுப்பின் கீழ், ₹227.2 கோடி ஒதுக்கீட்டில் 24,000 விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் வழங்கி ஆதரவளிக்கப் படும்.
  • உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டமானது வானிலை அறிவிப்புகள், மண்வளக் கண்காணிப்பு மற்றும் சந்தைத் தகவல்களுக்காக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (ML) கருவிகளைப் பயன்படுத்தும்; இதற்காக ₹2 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.
  • விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டத்திற்கு 2026-27 ஆம் நிதியாண்டிற்கு ₹7,432 கோடி ஒதுக்கப்படும்.
  • விவசாய நிலங்களில் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்த மண்வள மேம்பாட்டு நடவடிக்கைகள் ₹600 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • உரங்களின் திறமையான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 1 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும்; இதற்காக ₹4 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.
  • விவசாய நிலங்களைச் சுற்றி மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிப்பதன் மூலம் வேளாண் காடுகளை மேம்படுத்த 'வேளாண் காடுகள் திட்டம்' ₹17.7 கோடியில் செயல் படுத்தப் படும்.
  • மனித-வனவிலங்கு மோதலின் தாக்கங்களைக் குறைக்க காட்டுப்பன்றிகள் மற்றும் யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் ₹7.35 கோடியில் பலப்படுத்தப்படும்.
  • அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டமானது, சிறு மற்றும் குறு பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின (ST) விவசாயிகளுக்கு ₹56.7 கோடியில் ஆதரவளிக்கும்.
  • தமிழ்நாடு சிறுதானியத் திட்டம், சிறுதானிய சாகுபடி மற்றும் உற்பத்தியானது ₹63.81 கோடியில் விரிவுபடுத்தப்படும்.
  • பருத்திப் புரட்சி திட்டமானது, ஐந்து ஆண்டுத் திட்டத்தின் மூலம் பருத்தி விவசாயிகளுக்கு ₹27.2 கோடியில் ஆதரவளிக்கும்.
  • சின்ன வெங்காயத்திற்கான சேமிப்பு வசதிகள் 57,000 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் ₹22 கோடி ஒதுக்கீட்டில் நிறுவப்படும்.
  • வெற்றி வான்மகள் திட்டத்தின் கீழ், 100 பெண் விவசாயிகள் உட்பட 500 விவசாயிகளுக்கு ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படும்; இதற்காக ₹4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டிலிருந்து வேளாண் ஏற்றுமதியை மேம்படுத்த ₹8.4 கோடி ஒதுக்கப்படும்.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டிற்கான உணவு தானிய உற்பத்தியை 131 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்