TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு நகரம் - அறிவகம்

August 8 , 2026 5 days 77 0
  • 2026-27 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டில் 'அறிவகம்' என்ற பெயரிலான இந்தியாவின் முதல் பிரத்தியேக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கண்டுபிடிப்பு நகரத்தை தமிழ்நாடு அறிவித்துள்ளது.
  • இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வானது ₹5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் படும்.
  • அறிவகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம், குறைக்கடத்தி வன்பொருள் பரிசோதனை ஆய்வகம், பல-களக் கண்டுபிடிப்புக் காப்பகங்கள் மற்றும் குடியிருப்பு வசதிகள் ஆகியவை இடம்பெறும்.
  • இத்திட்டமானது செயற்கை நுண்ணறிவு (AI), ஆழ்-தொழில்நுட்ப ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, புத்தொழில்கள் மற்றும் திறமையான பணியாளர் மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் முதலீட்டு சேவை அமைப்பான Guidance 3.0-ஐ தமிழ்நாடு அறிமுகப்படுத்துவதோடு, அனைத்து தொழில்துறை ஒப்புதல்களையும் ஒரே தளத்தின் மூலம் வழங்குவதற்காக தமிழ்நாடு ஒற்றைச் சாளர வலைதளம் 3.0-ஐ மேம்படுத்தும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்