தேசிய எலும்பு மற்றும் மூட்டு விழிப்புணர்வு தினம் 2026 - ஆகஸ்ட் 4
August 7 , 2026 6 days 58 0
எலும்பு, மூட்டு, முதுகுத்தண்டு மற்றும் தசைக்கூட்டு (எலும்புகள், மூட்டுகள், தசைகள் மற்றும் தொடர்புடைய திசுக்கள்) ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய எலும்பியல் சங்கத்தால் (IOA) 2012 ஆம் ஆண்டில் "வலுவான எலும்புகள், வலுவான இந்தியா" என்ற முழக்கத்துடன் இந்த தினம் தொடங்கப்பட்டது.
எலும்பு மற்றும் மூட்டு கோளாறுகளைக் குறைப்பதற்காக ஆரம்பகால நோயறிதல், தடுப்பு பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களை இது ஊக்குவிக்கிறது.
முதுமை மூட்டழற்சி, முடக்கு வாதம், ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம், மற்றும் முதுகு மற்றும் முதுகுத்தண்டு கோளாறுகள் ஆகியவை பொதுவான எலும்பு மற்றும் மூட்டு நோய்களில் அடங்கும்.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Healthy Bones, Healthy Joints, Healthier India" என்பதாகும்.