தமிழ்நாடு ஸ்டார்ட் ஸ்மார்ட் துவக்க நிதியத்தின் கீழ், ஆரம்பக் கட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கான துவக்க நிதியை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.
தொடக்கக் கட்டங்களில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதையும், அவர்களின் ஆரம்பகால நிதிச் சிக்கல்களைச் சமாளிக்க உதவுவதையும் இந்நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநிலத்தின் புத்தொழில் ஆதரவு முகமையான StartupTN மூலம் இத்திட்டம் செயல்படுத்தப் படும்.
இந்த மேம்படுத்தப்பட்ட உதவியானது, தமிழ்நாட்டைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அதிக நிதி ஆதரவை வழங்கும்.