TNPSC Thervupettagam

தமிழ்நாடு ஸ்டார்ட் ஸ்மார்ட் துவக்க நிதியம்

September 3 , 2026 10 days 79 0
  • தமிழ்நாடு ஸ்டார்ட் ஸ்மார்ட் துவக்க நிதியத்தின் கீழ், ஆரம்பக் கட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கான துவக்க நிதியை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.
  • தொடக்கக் கட்டங்களில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதையும், அவர்களின் ஆரம்பகால நிதிச் சிக்கல்களைச் சமாளிக்க உதவுவதையும் இந்நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாநிலத்தின் புத்தொழில் ஆதரவு முகமையான StartupTN மூலம் இத்திட்டம் செயல்படுத்தப் படும்.
  • இந்த மேம்படுத்தப்பட்ட உதவியானது, தமிழ்நாட்டைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அதிக நிதி ஆதரவை வழங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்