TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் உள் இடஒதுக்கீடுக் கொள்கை

September 13 , 2025 28 days 169 0
  • 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கல்வித் தரங்களை மறுஆய்வு செய்வதற்காக ஓர் உயர் மட்டக் குழுவை அமைத்தது.
  • இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், கிராமப்புறங்களில் உள்ள பஞ்சாயத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தொழில்முறைப் படிப்புகளுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கும் அரசு ஆணை (G.O.) பிறப்பிக்கப்பட்டது.
  • 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 15% இட ஒதுக்கீடு மருத்துவப் படிப்புகளுக்கும் பின்னர் சட்டப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
  • 2001 ஆம் ஆண்டில், ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கிராமப் புறங்களுக்கான ஒதுக்கீட்டை 15 சதவீதத்திலிருந்து 25% ஆக உயர்த்தியது.
  • 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வானது, இந்திய அரசியலமைப்பின் 14வது சரத்தின் கீழ் இந்த அரசாணையை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று ரத்து செய்தது.
  • தமிழக அரசானது, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு (SLP) தாக்கல் செய்தது.
  • உள் இடஒதுக்கீடு ஆனது கிராமப்புற மாணவர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும், மேலும் அது சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையை அடிப்படையாகக் கொண்டது என்றும் SLP வாதிட்டது.
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
  • இதன் விளைவாக, 25% கிராமப்புற இடஒதுக்கீடு கொள்கை நிறுத்தப் பட்டது.
  • 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், எடப்பாடி K. பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, NEET தேர்வு அடிப்படையிலான மருத்துவ சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடுக்கான மசோதாவை நிறைவேற்றியது.
  • இந்தக் கொள்கையானது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி P. கலையரசன் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்தது.
  • இந்த ஆணையம் 10% இடஒதுக்கீட்டை பரிந்துரைத்தது, ஆனால் அரசாங்கம் 7.5% ஒதுக்கீட்டினையே செயல்படுத்தியது.
  • 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு 7.5% இடஒதுக்கீட்டை விரிவுப்படுத்தியது.
  • ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி D. முருகேசன் தலைமையிலான மற்றொரு ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விரிவாக்கம் செய்யப்பட்டது.
  • இந்தக் கொள்கையானது, தற்போதுள்ள 69% வெளி இடஒதுக்கீட்டைப் பாதிக்காமல், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஒரு புதிய அளவுருவினை அறிமுகப்படுத்தியது.
  • இந்தக் கொள்கையின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்கள் BC, MBC, SC, ST மற்றும் OC உள்ளிட்ட அனைத்து வெளிப் பிரிவுகளிலும் முன்னுரிமை சேர்க்கையைப் பெறுகிறார்கள்.
  • 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சென்னை உயர் நீதிமன்றம் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மையினை உறுதி செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்