TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் சரிவு

September 7 , 2026 6 days 129 0
  • தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டில் 8.02 லட்சம் பிறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இது 2024 ஆம் ஆண்டில் பதிவான 8.47 லட்சம் பிறப்புகளை விடச் சுமார் 45,000 குறைவு ஆகும். மேலும் இது 5.3% சரிவைக் குறிக்கிறது.
  • தமிழ்நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே மாற்று விகிதமான 2.1-க்குக் கீழே குறைந்துவிட்டது, மேலும் மக்கள் தொகை உந்து விசையின் விளைவுக்குப் பிறகு தற்போது மக்கள் தொகை வளர்ச்சி குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • குறைந்து வரும் பிறப்பு விகிதம் எதிர்காலத்தில் சிறிய அளவிலான உழைக்கும் வயது டைய மக்கள் தொகைக்கும், அதிக அளவிலான முதியோர் மக்கள் தொகைக்கும் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மாநில அரசு, பிறப்புகளை அதிகரிக்க முயற்சிப்பதை விட தரமான கல்வி, குழந்தை பராமரிப்பு, சமூகப் பாதுகாப்பு, முதியோர் பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் வேலை வாய்ப்பு வாய்ப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்