TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் புதிய தொழில் திட்டங்கள்

September 3 , 2026 10 days 96 0
  • தமிழக முதலமைச்சர் மாநிலத்தில் புதிய தொழில் திட்டங்களை அறிவித்தார்.
  • காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் சிப்காட் (தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்) மூலம் ரூ.175 கோடி மதிப்பில் குறைக்கடத்தி மற்றும் மின்னணுப் பொருட்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
  • பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் ரூ.400 கோடி மதிப்பில் டிட்கோ (தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்) மூலம் கோயம்புத்தூர் ஃபின்டெக் மையம் (FinTech Hub) அமைக்கப்படவுள்ளது.
  • தொழில்துறைகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) ஆதரவளிக்கும் வகையில் திருச்சி மண்டலத்தில் பன்முக சரக்குப் போக்குவரத்து மையம் (Multi-Modal Logistics Hub) அமைக்கப்படவுள்ளது.
  • மாநிலத்தின் தொழில் மற்றும் மின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் தூத்துக்குடியில் புதிய சூப்பர்கிரிட்டிக்கல்/மீஉயர்அழுத்த அனல் மின் நிலையம் அமைக்கப் படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்